ட்விட்டரில் ட்ரெண்டாகும் விஜய் ஹேஸ்டேக்: உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் விஜய் ஹேஸ்டேக்: உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்!

புதுச்சேரி: திருமண விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரி சென்ற நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் புஸி ஆனந்தின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் புதுச்சேரி சென்றார்.

விஜயின் வருகையையொட்டி தடபுடலான ஏற்பாடுகளை செய்திருந்தார் புஸி ஆனந்த். அவரை காண்பதற்காக ரசிகர்களின் கூட்டம் பெருமளவில் வரக்கூடும் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.புதுச்சேரியே அலறும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள் என அவரது ரசிகர்கள் அமர்க்களப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரிலும் #PondyWelcomesTHALAPATHY என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

vijay at pondichery thalapathy vijay attended marriage function புதுவையில் தளபதி விஜய்
சினிமா

Leave a comment

Comments