பிக் பாஸ் கேர்ள்ஸுடன் ஜாலி டான்ஸ்: ஒன் மேன் ஆர்மியாக கலக்கும் பாலாஜி!

பிக் பாஸ் கேர்ள்ஸுடன் ஜாலி டான்ஸ்: ஒன் மேன் ஆர்மியாக கலக்கும் பாலாஜி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூனியர்ஸ்களை சீனியர்ஸ் விரட்டி விரட்டி வெளுக்கும் புரொமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் சிலர் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் ஜுனியர்ஸ் டாஸ்க்குகளை விளையாடி வருகின்றனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகிய மகளிர் கூட்டத்தில் ஒரே ஒரு ஆண் போட்டியாளராக பாலாஜி இருக்கிறார். இந்நிலையில், இந்த வாரத்துக்கான டாஸ்க்கை முடித்த போட்டியாளர்கள் சீனியர்ஸுடன் ஆடிப்பாடி கூத்தடிக்கும் காட்சிகள் புதிய புரொமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவில் ஜுனியர்ஸ்கள் திரைப்பட பாடலுக்கு உற்சாகமாக நடனமாடுகின்றனர். அதில் பெண் போட்டியாளர்களிடையே ராஜா போல் பாலாஜி நடனமாடுகிறார். அதைத் தொடர்ந்து ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடலுக்கு ஆடும் சீனியர்ஸ் ’உங்கள எல்லாம் பாத்தா விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது’ என்று பாடிக் கொண்டு ஜுனியர்ஸை டார்கெட் செய்கின்றனர்.

இவர்களின் ஆட்டம் ஒன்றோடு முடிவுக்கு வரும் என தெரிகிறது. நாளை வார இறுதிக்கான நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வருவதால், பிக் பாஸ் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் 2 பிக் பாஸ் 2 கமல்ஹாசன் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் யாஷிகா Bigg Boss Tami 2 Bigg Boss Tamil Bigg Boss 2 Ticket to Finale Task Yaashika
சினிமா

Leave a comment

Comments