ஒரே நாளில் ’2.0’ டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை

ஒரே நாளில் ’2.0’ டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 3.2 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ’2.o’ டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியானது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியான ‘2.0’ படத்தின் மிரட்டலான டீசர் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. சுமார் ரூ.542 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசரில் வந்த கிராபிக்ஸ் காட்சிகளே ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

முதன்முறையாக 2டி மற்றும் 3 டி தொழில்நுட்பத்தில் இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் ரிலீசான ‘2.0’ டீசருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் யூடியூபில் புதிய சாதனையை 2.0 டீசர் படைத்து வருகிறது. யூடியூபில் வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 3.2 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன், ரியாஸ் கான், சுதான்சு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’2.0’ திரைப்படம் நவ.29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

2.0 2.0 டீசர் ரஜினிகாந்த் ஷங்கர் அக்‌ஷய் குமார் 2Point0 2.0 teaser 2Point0 Teaser Rajinikanth Akshay Kumar 2.o teaser
சினிமா

Leave a comment

Comments