குணமா வாயில சொல்லணும்: நடிகர் அஜித்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஸ்மித்திகா

குணமா வாயில சொல்லணும்: நடிகர் அஜித்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஸ்மித்திகா

சென்னை: அம்மாவுக்கு அட்வைஸ் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலான குழந்தை ஸ்மித்திகா நடிகர் அஜித்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்மித்திகா பள்ளியில் உணவு சாப்பிடாமல் வந்ததால் அவரது அம்மா பிரவீனா அவரை கண்டித்துள்ளார். அதற்கு , தப்பு பண்ணினா அடிக்கக் கூடாது, குணமா வாயில சொல்லணும் என அழுது கொண்டே அம்மாவுக்கு அட்வைஸ் கூறியுள்ளார் ஸ்மித்திகா. இதையடுத்து  அவரது வீடியோ  சமூக வலைத்தளத்தில் டிரெண்ட்ங்கில் உள்ளது.இந்நிலையில் தற்போது  ஸ்மித்திகா பேசிய டப்ஸ்மாஷ் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.அதில் சினிமா பாடல்கள், வசனங்கள் எனக் கலக்கியுள்ள ஸ்மித்திகா நடிகர் அஜித்திற்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.அதில், 'தல  மாமா, நீங்கனா எனக்கு ரொம்ப பிடிக்கும், என்ன எப்போ  வந்து வண்டில கூட்டிட்டு போங்வீங்க, நான் புது டிரெஸ் போட்டுட்டு ரெடியா இருக்கேன், நீங்க எப்போ வருவீங்க' என்ற தன் மழலை மொழியில் கேட்டுள்ளார் ஸ்மித்திகா.

நடிகர் அஜித்தை  பார்க்கவேண்டும் என்ற ஸ்மித்திகாவின் ஆசை நிறைவேறும் என்று நெட்டிசன்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

குணமா வாயில சொல்லணும் ஸ்மித்திகா டப்ஸ்மாஷ் நடிகர் அஜித் வைரல் வீடியோ actor ajith smithika dubsmash viral video
சினிமா

Leave a comment

Comments