பழிக்கு பழி: அக்ஷய் கழுகாக மாறியது எப்படி? மனிதர்களை அழிப்பது ஏன்? கசிந்தது 2.௦ கதை?

பழிக்கு பழி: அக்ஷய் கழுகாக மாறியது எப்படி? மனிதர்களை அழிப்பது ஏன்? கசிந்தது 2.௦ கதை?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ’2.o’ படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’2.o’ படத்தின் டீசர் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகி யூடியூபில் அதிரடி சாதனை படைத்து வருகின்றனர். ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ’2.o’ இப்படம் வரும் நவ.29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.


இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியான பிரம்மாண்ட டீசரே அனைவரையும் திரும்பிப்பார்க்கச் செய்தது. இந்நிலையில், டீசரில் இடம்பெறுள்ள காட்சிகளை வைத்து, இப்படத்தின் கதை குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் செல்போன் என்பது மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. தொழில்நுட்ப உலகில் செல்போன்களின் அபரிவிதமான வளர்ச்சி, பறவைகளின் அழிவிற்கு காரணமாகிவிட்டது.


சிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி அழிந்து வரும் ஒரு பறவை இனத்தைச் சேர்ந்த பறவைக்கு கிடைக்கும் அரிய சக்தி மூலம், உலகில் உள்ள செல்போன்களை செயலிழக்கச் செய்கிறது. வில்லத்தனமான இந்த ராட்சத பறவையிடம் இருந்து உலகை காப்பாற்ற டாக்டர் வசீகரன் ராணுவத்துக்காக தயார் செய்யப்பட்டு பின் செயலிழக்கப்பட்ட ‘சிட்டி’ ரோபோவை மீண்டும் உலகிற்கு அறிமுகம் செய்கிறார்.


சிட்டி ரோபோவுக்கும், அந்த ராட்சத பறவைக்குமான மோதல் தான் ’2.o’ படத்தின் கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உலக மக்களை அடிமையாக்கி வைத்திருக்கும் செல்போனை அழிக்க வரும் வில்லன் பறவையிடம் இருந்து சிட்டி ரோபோ உலகை எப்படி காப்பாற்றுகிறது என்பதை நவ.29ம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


வெர்சுவல் கேமராவில் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ’2.o’ படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருக்க இப்படத்தில் காதல், காமெடி காட்சிகள் இல்லாமல் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியீட்டிற்கு பின் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

2.0 2.0 டீசர் ரஜினிகாந்த் ஷங்கர் அக்‌ஷய் குமார் 2Point0 2.0 teaser 2Point0 Teaser Rajinikanth Akshay Kumar 2.o teaser
சினிமா

Leave a comment

Comments