மயங்கி விழுந்த யாஷிகா; கதறி அழும் மும்தாஜ்! என்ன நடந்தது?: பரபரப்பின் உச்சத்தில் பிக்பாஸ்!

மயங்கி விழுந்த யாஷிகா; கதறி அழும் மும்தாஜ்! என்ன நடந்தது?: பரபரப்பின் உச்சத்தில் பிக்பாஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க்கை முடித்த யாஷிகா திடீரென மயக்கம் போட்டு விழுந்ததில் பிக் பாஸ் பதட்டம் அடைந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்துக்கான் டாஸ்க் நடைபெற்று வருகிறது. ‘டிக்கெட் டூ ஃபினாலே’ என்ற டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டில் உள்ள 7 போட்டியாளர்களில் ஜனனி மற்றும் யாஷிகா மட்டும் இறுதி வரை விளையாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் நேரடியாக பிக் பாஸ் இறுதி வாரத்துக்கு தகுதி பெறவுள்ளனர்.

இந்நிலையில், கையில் தண்ணீர் கோப்பையை ஏந்தியபடி ஒருவரையொருவர் சுற்றி வர வேண்டும் என்பதாலோ என்னவோ, உடல்நலக் குறைவால் யாஷிகா திடீரென பெட்டில் மயங்கி விழும் காட்சி புதிதாக வெளியான புரொமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

டாஸ்க்கை முடித்துவிட்டு அமர்ந்திருந்த யாஷிகா பேசிக் கொண்டே திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து அவருக்கு மற்ற போட்டியாளர்கள் முதலுதவி அளிக்கின்றனர். இதனை பார்த்து பதறிய பிக் பாஸ் யாஷிகாவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைக்கிறார்.

மயக்க நிலையில் உள்ள யாஷிகாவை போட்டியாளர்கள் கைத்தாங்கலாக கன்ஃபெஷன் ரூமிற்கு தூக்கிச் செல்கின்றனர். யாஷிகாவின் இந்த நிலையை பார்த்து அவரது ஆர்மிக்களும் பதறுகின்றனர். ஆனால், ஒரு சிலர் கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸ் கொடுக்கும் சிகிச்சையில் தான் யாஷிகா குணமடைவார் என கூறி நக்கலடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் 2 பிக் பாஸ் 2 கமல்ஹாசன் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் யாஷிகா Bigg Boss Tami 2 Bigg Boss Tamil Bigg Boss 2 Ticket to Finale Task Yaashika
சினிமா

Leave a comment

Comments