ரோபோ டா..: இணையத்தை கலக்கும் ரஜினியின் ‘2.0’ டீசர்!

ரோபோ டா..: இணையத்தை கலக்கும் ரஜினியின் ‘2.0’ டீசர்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.o’ படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ’2.o’ டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியானது. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன், ரியாஸ் கான், சுதான்சு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ’2.o’ படத்தின் மிரட்டலான டீசர் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.

2டி தொழில்நுட்பத்தில் யூடியூபில் வெளியான ’2.o’ தமிழ் டீசர் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் லைக்ஸ்களை பெற்று, 9.8 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். அதேபோல் தெலுங்கு டீசர் சுமார் 2 லட்சம் லைக்ஸ்கள் பெற்று, 5 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். தமிழ்-தெலுங்கை காட்டிலும் ஹிந்தி மொழியில் வெளியான டீசர் 4 லட்சம் லைக்ஸ்கள் பெற்று, 10 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

உலகளவில் ரசிகர்களை கவர்ந்த தமிழ் நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’2.o’ டீசருக்கு தமிழை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்திருப்பதால் கூட இத்தனை வரவேற்பு கிடைத்திருக்கலாம். ஆனாலும், தமிழில் ரஜினிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.

2.0 2.0 டீசர் ரஜினிகாந்த் ஷங்கர் அக்‌ஷய் குமார் 2Point0 2.0 teaser 2Point0 Teaser Rajinikanth Akshay Kumar 2.o teaser
சினிமா

Leave a comment

Comments