சீமராஜா பாக்ஸ் ஆபீஸ்: வசூல் மன்னர் ரஜினிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தானாம்!

சீமராஜா பாக்ஸ் ஆபீஸ்: வசூல் மன்னர் ரஜினிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தானாம்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த ‘சீமராஜா’ திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. 

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘சீமராஜா’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. படத்திற்கு படம் சிவகார்த்திகேயனின் மவுசு அதிகரித்து வருகின்றன. இதுவரை தோல்வி படங்களையே கண்டிராத சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது.

கேடிஎம் லைசன்ஸ் பிரச்னை காரணமாக அதிகாலை சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டு, பின்னர் ரிலீஸானது. தமிழகம் முழுவதும் நேற்று ரிலீஸான இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.10 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது. சென்னை பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூ.1.01 கோடி வசூலித்துள்ளது.

இந்த ஆண்டு முதல் நாளில் அதிகம் வசூலித்த ரஜினியின் ‘காலா’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ திரைப்படம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் ரூ.10 கோடியை தாண்டிய முதல் படம் ’சீமராஜா’.

கோலிவுட்டில் வசூல் மன்னர்களான ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் சீமராஜா சீமராஜா பாக்ஸ் ஆபீஸ் சீமராஜா வசூல் காலா ரஜினிகாந்த் Sivakarthikeyan Seemaraja Box Office Seemaraja First Day collection Kaala Rajinikanth
சினிமா

Leave a comment

Comments