சர்கார் ஷூட்டிங் ஸ்பாட்: விஜய் நடனமாடும் வீடியோ லீக்; வைரலாகும் வீடியோ!

 சர்கார்  ஷூட்டிங் ஸ்பாட்: விஜய் நடனமாடும் வீடியோ லீக்; வைரலாகும் வீடியோ!

லாஸ் வேகாஸ்: நடிகர் விஜய் நடிக்கும் சர்கார்  படத்தின் நடன காட்சி ஒன்று சமூக வலைதளங்களில்  வேகமாகப் பரவி வருகிறது 
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர்  நடிக்கும் படம் சர்கார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு இந்தியாவில் நடைபெற்றது. தற்போது  அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகாஸுல் சில காட்சிகளும்,பாடல்களும் படமாக்க பட்டு வருகிறது.


ஏற்கனவே இந்தப் படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தப் படத்தின் நடன காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.அதில் நடனக்குழுவுடன் விஜய் நடனமாடுகிறார்.


விஜய் படத்தில் வரும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவரும்.  அந்த வகையில் இந்த அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்பாடலை நடன இயக்குநர் ஷோபி கோரியோ கிராஃப்  செய்துள்ளது   குறிப்பிடத்தக்கது.

SARKARSongShoot Vijay LasVegas sarkar vijaysarkar sarkar shooting லாஸ் வேகாஸ் நடிகர் விஜய் விஜய் சர்கார் shooting spot
சினிமா

Leave a comment

Comments