முன்னணி நடிகைகள் நடிக்க மறுத்த படத்தில் நடிக்கும் ராய் லட்சுமி: பின்னணி என்ன?

முன்னணி நடிகைகள் நடிக்க  மறுத்த படத்தில் நடிக்கும் ராய் லட்சுமி: பின்னணி என்ன?

சென்னை: பேண்டஸி ஹாரர் த்ரில்லர்  படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ராய் லட்சுமி.

உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட்ரல்லா . அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது.  ராய் லட்சுமி நடிக்கும் இப்படமானது பேண்டஸி ஹாரர் த்ரில்லர்  எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தை  எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.இப்படம் குறித்து இயக்குநர்  வினோ வெங்கடேஷ் பேசும் போது, இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். 
நடிகை ராய் லட்சுமிக்கு  படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். நாங்கள் அனுப்பியிருந்த கதைச் சுருக்கம் , குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார், கதையைக் கேட்டு விட்டு  சம்மதம் கூறினார். இப்போது முழுமையாக 'சிண்ட்ரல்லா'வுக்குள்  புகுந்து விட்டார் " என்று கூறினார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இந்த படத்தில் நயன்தாரா, எமி ஜாக்சன் உள்ளிட்ட சில நடிகைகள்  நடிக்க  மறுத்த நிலையில் தற்போது ராய் லட்சுமி நடிப்பது குறிப்பிடத்தக்கதுcinderella actress raai laxmi raai laxmi horror fantasty kollywood பேண்டஸி ஹாரர் த்ரில்லர் நடிகை ராய் லட்சுமி. ராய் லட்சுமி
சினிமா

Leave a comment

Comments