சண்டக்கோழி 2 படக்குழுவிற்கு தங்க காசு தந்த கீர்த்தி சுரேஷ்: காரணம் என்ன?

சண்டக்கோழி 2 படக்குழுவிற்கு தங்க காசு தந்த கீர்த்தி சுரேஷ்: காரணம்  என்ன?

சென்னை: சண்டக்கோழி படத்தின் கடைசி நாளின்போது படக்குழுவினருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தங்கக்காசு பரிசளித்துள்ளார்  

தமிழில் ரஜினி முருகன், பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று தந்தது. தற்போது இவர்  விஷால் ஜோடியாக ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடித்து வருகிறார்.  லிங்குசாமி இயக்கியுள்ள இந்தப் படம், ஏற்கெனவே வெளியான ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாகத் தயாராகியுள்ளது. மேலும், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார், கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர்  ராஜா இசையமைக்க, கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. அக்டோபர் மாதம் 18-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.இந்நிலையில், படப்பிடிப்பின் கடைசி நாளன்று, படக்குழுவினர் அனைவருக்கும் தங்கக்காசு பரிசளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தன்னுடன் உழைக்கும் படக்குழுவிற்கு தன்  நன்றியை தெரிவிக்கும் விதமாக  தங்க காசை வழங்கியுள்ளார். இதேபோல் ‘நடிகையர் திலகம்’ படப்பிடிப்பின் கடைசி நாளன்றும் படக்குழுவினருக்கு கீர்த்தி சுரேஷ் தங்கக்காசு பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

Sandakozhi2 Kollywood Movie vishal keerthy suresh சண்டக்கோழி கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ் தங்கக்காசு
சினிமா

Leave a comment

Comments