பிக் பாஸ் தமிழ் 2: ரைசாவை கல்யாணம் பண்ணிக்க விரும்பும் சென்ராயன்!

பிக் பாஸ் தமிழ் 2: ரைசாவை கல்யாணம் பண்ணிக்க விரும்பும் சென்ராயன்!

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ள ரைசாவை கல்யாணம் செய்துக் கொள்ள சென்ராயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ரிலீசான ‘பியார் பிரேமா காதல்’ படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர். இப்படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்கள் என்பதால், இவர்களது வருகை கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது.

இன்றைய நிகழ்ச்சி தொடர்பான புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் இந்த சீசனில் ஆர்வக் கோளாறு என பெயர் பெற்ற சென்ராயன், இன்ரு ஆர்வக் கோளாறால், ரைசாவிடம் மனம் திறந்து பேசுவது போல் வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தனது மனைவியின் அனுமதி பெற்று தங்களை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக ரைசாவிடம் சென்ராயன் கூறுகிறார். காமெடியாக கூறுவது போல் மனதில் பட்டதை பொசுக்குனு போட்டு உடைத்துவிட்டார் சென்ராயன் என ரைசா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் 2 பிக் பாஸ் தமிழ் விஜய் டிவி கமல்ஹாசன் பிக் பாஸ் 2 பிக் பாஸ் பிக் பாஸ் முதல் சீசன் ரைசா வில்சன் ஹரிஷ் கல்யாண் சென்ராயன் பியார் பிரேமா காதல் Bigg Boss Tamil 2 Bigg Boss Tamil Bigg Boss 2 Tamil Bigg Boss 2 Vivo Bigg Boss Vijay TV Kamal Haasan Bigg Boss Season 1 Pyaar Prema Kaadhal Harish Kalyan Senrayan
சினிமா

Leave a comment

Comments