சர்வதேச கவனம் ஈர்த்த தளபதி: சீனாவில் வெளியாகும் ‘மெர்சல்’!

சர்வதேச கவனம் ஈர்த்த தளபதி: சீனாவில் வெளியாகும் ‘மெர்சல்’!

சென்னை: தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் மெர்சல் படத்துக்கும் விஜய்க்கும் விருதுகள் கிடைத்தன.

இந்நிலையில், உலக அரங்குகளில் கவனம் ஈர்த்த விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் சீனாவில் வெளியாகவிருக்கிறது. இதற்கான உரிமத்தை சீனாவை சேர்ந்த ஹெச்.ஜி.சி நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவன தலைவர் லி யீங், ‘மெர்சல்’ உணர்வுப்பூர்வமான படம் என கூறியுள்ளார். இந்த படம் சீனாவில் வெளியாகி அந்நாட்டு மக்களின் பேராதரவை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பேசும் ‘மெர்சல்’ படத்தை மாண்டரின் மொழியில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய படங்களான 3 இடியட்ஸ், பிகே, பஜ்ராங்கி பைஜான், தங்கல், பாகுபலி போன்ற படங்கள் சீனாவில் வெளியாகி வசூல் வேட்டையாடிய நிலையில், முதல் தமிழ்ப்படமாக விஜய்யின் ‘மெர்சல்’ படம் வெளியாகவிருக்கிறது.

சீனாவில் மெர்சல் மெர்சல் விஜய் தளபதி விஜய் மெர்சல் சீனாவில் ரிலீஸ் அட்லி Mersal in China Mersal release in China Thalapathy Vijay Vijay Mersal
சினிமா

Leave a comment

Comments