பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி தான் இந்த சீசன் ஜூலியா?அட்ரா சக்க!

பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி தான் இந்த சீசன் ஜூலியா?அட்ரா சக்க!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனுக்கான ஜூலி வைஷ்ணவி என பொசுக்குனு உண்மையை போட்டு உடைத்தார் மும்தாஜ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 53 நாட்கள் கடந்துவிட்டன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கும், இந்த சீசனுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டினரே தங்களை முதல் சீசன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் செக்மண்ட் இன்றைய நிகழ்ச்சியில் நடைபெறவ்உள்ளதாக தெரிகிறது.

இன்றைய நிகழ்ச்சி குறித்த புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், போன சீசனில் வந்த ஜூலி, அங்க ஒரு பொய், இங்க ஒரு பொய், அந்த பொய்யையும் நியாயப்படுத்தி, மாத்தி மாத்தி பேசி போட்டுக் கொடுத்தது போல் தான் நீயும் செய்ற என வைஷ்ணவியை நேரடியாக தாக்கினார் மும்தாஜ். மேலும், அந்த 2 நிமிஷத்த அவங்க போட்டுக் காட்டலண்ணே என்ற ஜூலியின் ஆஸ்தான டயலாக்கையும் மும்தாஜ் இமிடேட் செய்தார். ஆனால், அந்த மாதிரி மசலா கண்டெண்ட் இந்த முறை இல்லையே எனும் யாஷிகாவின் வருத்தம் நியாயமானது தான்.

ஆக மொத்தத்தில் என்னை ஜூலி என சொல்லிட்டீங்க என்று முகத்தை சுருக்கிக் கொண்டார் வைஷ்ணவி. ஆக, ஓவியா-ஆரவ் போல் மகத்-யாஷிகா, ஜூலியாக வைஷ்ணவி, அடுத்து காயத்ரி யாரு? சினேகன் யாரு? என நெட்டிசன்கள் வரிசைக்கட்டி விமர்சித்து வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் 2 பிக் பாஸ் தமிழ் விஜய் டிவி கமல்ஹாசன் பிக் பாஸ் 2 பிக் பாஸ் வைஷ்ணவி ஜூலி மும்தாஜ் பிக் பாஸ் முதல் சீசன் Bigg Boss Tamil 2 Bigg Boss Tamil Bigg Boss 2 Tamil Bigg Boss 2 Vivo Bigg Boss Vijay TV Kamal Haasan Bigg Boss Season 1 Julie Vaishnavi
சினிமா

Leave a comment

Comments