நட்பா? காதலா?: கழட்டிவிடும் மகத்; கதறி அழும் யாஷிகா!

நட்பா? காதலா?: கழட்டிவிடும் மகத்; கதறி அழும் யாஷிகா!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் மகத் மற்றும் யாஷிகாவுக்கும் இடையே நட்பையும் தாண்டி புனிதமான உறவு இருப்பதை முன்னாள் பிக் பாஸ் ஹீரோ ஹரிஷ் கல்யாண் அம்பலமாக்கிவிட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 53 நாட்கள் நிறைவடைந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கும், இந்த சீசனுக்கு துளிக்கூட ஒற்றுமை இல்லை. அதில் இருந்து போட்டியாளர் வேறு ரகம், இவர்கள் வேறு ரகம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் நிலவி வருகின்றன.

ஆனால், இந்த இரண்டு சீசனுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பது சமீப காலமாக நிரூபணம் ஆகிவருகிறது. முதல் சீசனில் ஓவியா-ஆரவ் காதல் லூட்டிகளை போல் இந்த சீசனில் மகத்-யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா-ஷாரிக் காதல் சேட்டைகள் இருந்தன. ஆனால், ஒரு காதல் கிசுகிசு போதும் என பிக் பாஸ் நினைத்துவிட்டார் போல, ஷாரிக்கை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டனர்.

இந்நிலையில், முதல் சீசன் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் இன்று ரிலீஸாகிறது. இந்த படத்தின் புரொமோஷனுக்காக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஹரிஷ், மகத்-யாஷிகா உறவை ஊரறியச் செய்துவிட்டார்.

ஹரிஷின் கேமில், மகத்-யாஷிகாவிற்கு இடையே நட்பையும் தாண்டி ஒரு புனிதமான உறவு இருப்பதை எத்தனை பேர் ஒப்புக் கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு யாஷிகா உட்பட ஒட்டுமொத்த பிக் பாஸ் குடும்பத்தினரும் இருவருக்கும் இடையே புனிதமான உறவு இருப்பதை ஒப்புக் கொண்டு க்ரீன் சிக்னல் காட்டினர். ஆனால், மகத்தோ யாஷிகா வெறும் டைம்பாஸ் தான் என எண்ணிவிட்டார் போல, சற்றும் யோசிக்காமல் ரெட் சிக்னல் காட்டி யாஷிகாவை கதறடித்துவிட்டார்.

முதல் சீசனில் உண்மையான காதலுக்காக ஏங்கி மக்கள் மனதை கொள்ளையடித்த ஓவியா போல், இந்த சீசனில் யாஷிகா மக்கள் மனதை வெல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் 2 பிக் பாஸ் தமிழ் விஜய் டிவி கமல்ஹாசன் பிக் பாஸ் 2 பிக் பாஸ் மகத் யாஷிகா மகத்-யாஷிகா காதல் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் வீட்டில் காதல் Bigg Boss Tamil 2 Bigg Boss Tamil Bigg Boss 2 Tamil Bigg Boss 2 Vivo Bigg Boss Vijay TV Kamal Haasan Mahath Yaashika Mahath-Yaashika relationship Love Harish Kalyan
சினிமா

Leave a comment

Comments