‘விஸ்வரூபம் 2’ வெளியாவதில் சிக்கல்

‘விஸ்வரூபம் 2’ வெளியாவதில் சிக்கல்

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று ரிலீஸ் ஆகவில்லை.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவான ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இப்படத்திற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழகத்தின் சில முக்கிய மாவட்டங்களில் இப்படம் இன்று வெளியாகவில்லை.

திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே உடன்பாடு ஏற்படாததால் கடலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் இன்று வெளியாகவில்லை. நிதி நெருக்கடி காரணமாக விஸ்வரூபம் 2 ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. சென்னை காசி திரையரங்கிலும், திருநெல்வேலி ராம் திரையரங்கிலும் ரசிகர்களுக்கு காலை 8 மணி முதல் காட்சி திரையிடப்பட்டது. 

விஸ்வரூபம் 2 விஸ்வரூபம் 2 ரிலீஸ் இல்லை கமல்ஹாசன் உலகநாயகன் விநியோகஸ்தர்கள் பிரச்னை காசி திரையரங்கம் Vishwaroopam 2 Vishwaroopam 2 release no release Distributor tiff with Theatre owners Kaasi Theatre Ulaganayagan
சினிமா

Leave a comment

Comments