10ம் நம்பர் வீட்டில் கசமுசா: காமெடி நடிகரை காறித்துப்பிய ஸ்ரீரெட்டி

10ம் நம்பர் வீட்டில் கசமுசா: காமெடி நடிகரை காறித்துப்பிய ஸ்ரீரெட்டி

ஹைதராபாத் : ’ஸ்ரீலீக்ஸ்’, ‘தமிழ் லீக்ஸ்’ மூலம் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்த ஸ்ரீரெட்டி மீண்டும் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்பு கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையை களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கினார். 

தெலுங்கு திரையுலகினரை கலங்கடித்துவிட்டு சிறிது இடைவேளிக்குப் பின், தமிழ் திரையுலகினரை டார்கெட் செய்த ஸ்ரீரெட்டி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றம்சாட்டி தமிழ் திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

பிரபல தெலுங்கு காமெடி நடிகர் பிருத்வியை சர்ச்சையில் கோர்த்துவிட்டுள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான பிருத்வி குறித்து நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் ரோட்டில் உள்ள 10ம் நம்பர் வீட்டில் தாங்கள் செய்த காம லீலைகள் எல்லோருக்கும் தெரியும். அமெரிக்க நிகழ்ச்சிக்கு சென்ற பெண்களிடம் கசமுசாவில் ஈடுபட்டதை கூறுவா? இந்த லட்சணத்தில் அரசியல் பதவி ஒரு கேடா என கேவலப்படுத்தியதுடன் கெட்ட வார்த்தைகளால் வசைப்பாடியுள்ளார்.

மீண்டும் தொடங்கியுள்ள ஸ்ரீலீக்ஸ் புகார்கள் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி தமிழ் லீக்ஸ் தமிழ் சினிமா நடிகைகளுக்கு பாலியல் தொல்லை பாலியல் துன்புறுத்தல் படவாய்ப்புக்காக படுக்கை அழைப்பு காஸ்டிங் கவுச் பிருத்வி ராஜ் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் Sri Leaks Sri Reddy Tamil Film Industry Sexual Harassment Telugu Film Industry Sri Reddy Controversy Tamil Leaks Casting Couch YSR congress
சினிமா

Leave a comment

Comments